Newborn Dies as Doctor Cuts Genitals: பிரசவத்தின்போது குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மருத்துவர்; பச்சிளம் பிஞ்சு துடிதுடித்து பலி.!

சுய பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறி கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், குழந்தையின் ஆணுறுப்பை தவறுதலாக துண்டித்ததால் பச்சிளம் பிஞ்சு மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.

Newborn Dies as Doctor Cuts Genitals: பிரசவத்தின்போது குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மருத்துவர்; பச்சிளம் பிஞ்சு துடிதுடித்து பலி.!
Baby (Photo Credit: Pixabay)

ஜூலை 06, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவநாகரெ மாவட்டம், சிக்கத்தேரி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். இவரின் மனைவி அம்ருதா. தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவரின் அன்புக்கு அடையாளமாக, தற்போது அம்ருதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடிவு:

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதா, கடந்த ஜூன் 17ம் தேதி சிக்கத்தேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு இயற்கையாக பிரசவம் நடக்க சூழல் எட்டப்படாத காரணத்தால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவெடுத்துள்ளனர். TN Bahujan Samaj Party Armstrong Death: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம்; வெளியான பரபரப்பு தகவல்.! 

பெற்றோர் போராட்டம்:

இதனையடுத்து, மருத்துவர் நிஜாமுதீன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர் தவறுதலாக குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டி இருக்கிறார். இதனால் குழந்தை உயிருக்கு போராடி வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விஷயம் குழந்தையின் பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மேற்படி மருத்துவ துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jul 06, 2024 09:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).