Ilaiyaraaja Biopic: இளையராஜா பயோபிக்... இசைஞானியாக அவதரிக்கும் தென்னிந்திய புரூஸ் லீ..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Ilaiyaraaja Biopic: இளையராஜா பயோபிக்... இசைஞானியாக அவதரிக்கும் தென்னிந்திய புரூஸ் லீ..!
Ilaiyaraaja Biopic (Photo Credits: @dhanushkraja x)

மார்ச் 20, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ் (Dhanush). அவர் நடிப்பில் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த ஆண்டு கேப்டன் மில்லர் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த தனுஷ், அடுத்ததாக குபேரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ராயன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதோடு இயக்கியும் இருக்கிறார். இது நடிகர் தனுஷின் 50-வது படமாகும். இந்த வரிசையில லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் தான் இசைஞானி இளையராஜா பயோபிக் (Ilayaraja - The King of Music). Bengaluru Woman Complains Over Open-Window Romance: பக்கத்து வீட்டில் உல்லாசமாக இருந்த தம்பதியினர்.. காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்..!

இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கிறார்.

(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).