மார்ச் 20, பெங்களூர் (Bengaluru): பெங்களூரு, அவலஹள்ளி பகுதியில் வசிக்கும் 44 வயது பெண் ஒருவர், கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்து, பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதி உல்லாசமாக (Open Window Romance) இருப்பதாக கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞரின் கூற்றுப்படி, பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதியினர் வெளிப்படையாக அநாகரீகமாக இருந்தனர், இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர். இதனைக் குறித்து கேட்ட போது, தம்பதியினர் பெண்ணை மிரட்டத் தொடங்கியபோது, அவர் காவல்துறையினரிடம் புகார் (Woman Complains) அளித்தார்.
மேலும் நில உரிமையாளரும் அவரது மகனும் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். வீட்டின் உரிமையாளர் சிக்கனா மற்றும் அவரது மகன் மஞ்சுநாத் தம்பதியினரின் நடத்தையை ஆதரித்ததுடன், அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். Centre Flags Age Limit For IVF: மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோருக்கு பிறந்த குழந்தை.. குழந்தையின் பிறப்பு சட்டப்பூர்வமானதா என மிரட்டல்..!
இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 504, 506, 509 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ், அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்த குற்றங்கள், குற்றவியல் அச்சுறுத்தல்கள், வார்த்தைகள், சைகைகள் போன்ற குற்றங்களுக்காக காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.