Vettaiyan Trailer: காக்கி சட்டையில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அதிரடியாக ரெடியாகி உள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் தற்போது வெளியானது.

Vettaiyan Trailer: காக்கி சட்டையில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!
Vettaiyan (Photo Credit: YouTube)

அக்டோபர் 2, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன்: இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த பேட்டிகளையும் ரஜினியுடன் இணைந்த உற்சாகத்தையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்டைம் 2 மணிநேரம் மற்றும் 43 நிமிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே படத்தின் 3வது சிங்கிளும் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வெளியாகியுள்ள இரு பாடல்களும் அதிரடி சரவெடியாக அமைந்துள்ள நிலையில் 3வது பாடல் மெலடியாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Bigg Boss Tamil Season 8: "பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம்" - பிக் பாஸ் புதிய ப்ரோமோ.!

வேட்டையன் ட்ரெய்லர்: இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் மாசாய் டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெய்லர்:

(The above story first appeared on LatestLY on Oct 02, 2024 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).