அக்டோபர் 02, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிகழ்ச்சிகளில், கடந்த 8 ஆண்டுகளாக மக்களின் நினைவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் (Bigg Boss Tamil). கடந்த ஏழு சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி இருந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் எட்டாவது (Bigg Boss Season 8 Tamil) சீசனை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்குகிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் பிக் பாஸ் தமிழ் 8, வரும் அக்.06ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 100 நாட்கள் 20 போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் தங்களின் வரவேற்பை பெற்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இதன் வாயிலாக அவர்களுக்கு தனிப்பட்ட செல்வாக்கும் கிடைக்கும் நிலையில், இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. Vettaiyan: வேட்டையன் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.! 

பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம் என்ற தலைப்பில் பிக் பாஸ் ப்ரோமோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)