Vidaamuyarchi Update: ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த விடாமுயற்சி டீம்.. உச்சகட்ட குஷியில் இருக்கும் தல ரசிகர்கள்..!

நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது.

Vidaamuyarchi Update: ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த விடாமுயற்சி டீம்.. உச்சகட்ட குஷியில் இருக்கும் தல ரசிகர்கள்..!
Vidaamuyarchi Update (Photo Credit: @LycaProductions x)

ஜூலை 22, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Jayam Ravi's 'Brother' First Single Out: ஜெயம் ரவியின் 'மக்காமிஷி' பாடல் வெளியீடு.. "எனக்கு ரத்தம் வந்தா உனக்கு இன்னா" வைப் செய்யும் ரசிகர்கள்..!

விடாமுயற்சி ஷூட்டிங்: இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தின் போஸ்டரை படக்குழு கடந்த வாரம் வெளியிட்டது. சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட படபிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், பட குழுவோடு இணைந்து தல அஜித் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).