Viduthalai Part 2: விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?!
வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் 05, சென்னை (Cinema News): கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை (Viduthalai). இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி காவல் அதிகாரியாக நடிக்க இவருக்கு எதிரான கதப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் மெகா ஹிட்டானது இந்த திரைப்படம். Dream Girl Hema Malini: தீபாவளி பண்டிகையின் கடைசி திருவிழா.. கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ஹேம மாலினி.!
விடுதலை 2: விடுதலை ரிலீஸுக்கு முன்பே இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல், இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் மொத்தமாகவே முடித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார். அதோடு விடுதலை 2-வில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு:
#Viduthalai2 Worldwide Release on 20.12.2024 #VijaySethupathi #Vetrimaran #Soori pic.twitter.com/CEQQsGNzY2
— Yaseen (@tvk_yaseen) November 4, 2024
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

