Vijay Sethupathi Attended The Wedding Ceremony (Photo Credit: @backiya28 X)

மே 30, மதுரை (Madurai): மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த ஜெயபாஸ், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட தலைவராகவும், அவரது தம்பி ஜெயபால், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளனர். UP Cop Save Lifeless Monkey: "காவல்துறையினர் மனிதர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து உயிர்களுக்கும் நண்பன்.." குரங்கை காப்பாற்றி நிரூபித்த காவல்துறை அதிகாரி..!

இந்த இரு சகோதரர்களின் திருமண விழா வரும் 2ஆம் தேதி உசிலம்பட்டியில் நடைபெற உள்ள சூழலில் இன்று இந்த மணமக்களை நேரில் சந்திக்க வந்த நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi), இரு மணமக்களையும் ஆசிர்வதித்தார். தொடர்ந்து மணமக்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக கிளம்பி சென்றார்.