UP Cop Save Lifeless Monkey (Photo Credit: @ians_india X)

மே 30, உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh News): இந்தியாவில் வட இந்திய மற்றும் மத்திய இந்திய பகுதி மக்கள் தீவிர வெப்ப அலையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்த வாரம், 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நாட்டின் 37க்கும் மேற்பட்ட நகரங்களில் பதிவாகியுள்ளது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை (Heatwave) வீசி வருகிறது. Delhi Heatwave: டெல்லியை புரட்டி அடிக்கும் வெப்ப அலை.. தீயணைப்புத் துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்..!

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தில், வெப்பத்தால் குரங்கோன்று சுயநினைவற்ற நிலையில் உயிரற்று (Lifeless Monkey) இருந்தது. அதனைக் கண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் மணிக்கணக்கில் அதற்கு தண்ணீர் கொடுத்து, சிபிஆர் செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.