Bijili Ramesh: பிஜிலி ரமேஷின் உடலை பார்த்து பேச்சின்றி கலங்கிப்போன விஜே சித்து; மனதை உலுக்கும் வீடியோ உள்ளே..!

பிஜிலி ரமேஷ் இறுதி அஞ்சலியில், பிரபல யூடியூபர் விஜே சித்து கண்கலங்கியபடி நின்றார்.

Bijili Ramesh: பிஜிலி ரமேஷின் உடலை பார்த்து பேச்சின்றி கலங்கிப்போன விஜே சித்து; மனதை உலுக்கும் வீடியோ உள்ளே..!
VJ Siddhu | Bijili Ramesh File Pic (Photo Credit: @PaRanjithKannan X | @belikesagala X)

ஆகஸ்ட் 27, சென்னை (Cinema News): தமிழில் யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ் (Tamil Actor Bijili Ramesh). இவர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து, படங்களிலும் தொடர்ந்து நடிக்க துவங்கினார். எல்.கே.ஜி, நட்பே துணை, ஜெயம் ரவியின் கோமாளி என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றார். Bijili Ramesh: "இது தான் தவறான செயல்"; மறக்க முடியுமா அந்த நிகழ்வை?; பிஜிலி ரமேஷின் நினைவுகளை பகிரும் நெட்டிசன்கள்.!

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே பிஜிலி ரமேஷ்க்கு குடிப்பழக்கத்தால் உடல் முழுவதும் வீங்கி, வயிற்றில் இருந்து திரவம் கசிந்து உடல்நிலை மோசமாகி இன்று (ஆகஸ்ட் 27) அதிகாலை மரணமடைந்துவிட்டார் (Bijili Ramesh Passes Away).  இவரது இறுதிசடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறுகிறது.

இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பல சினிமா பிரபலங்கள் மற்றும் இவரது ரசிகர்கள் வந்தனர். அந்தவகையில், யூடியூப் பிரபலம் விஜே சித்துவும் (VJ Siddhu) இறுதி அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது, அவர் கண்கலங்கியபடி நின்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜே சித்து பிராங்க் ஷோ மூலம் பிஜிலி ரமேஷ் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

கண்கலங்கியபடி நின்ற விஜே சித்து: 

(The above story first appeared on LatestLY on Aug 27, 2024 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).