அக்டோபர் 15, கோவா (Cinema News): 1992ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஷாருக்கான் (Actor Shah Rukh Khan) தற்போது உலகம் முழுவதும் இந்தியாவுக்கான முகமாக சூப்பர் ஸ்டாராக அறியப்படுகிறார். இவர்க்கு சிறுவயதில் புது தில்லியில் உள்ள செயின்ட் கொலம்பாஸ் பள்ளியில் கற்பித்த மரியாதைக்குரிய கல்வியாளரான எரிக் ஸ்டீவ் டிசோசா (Brother Eric D'Souza) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) மதியம் 1.20 மணியளவில் கோவாவில் காலமானார். தில்லியின் செயின்ட் கொலம்பா பள்ளி மற்றும் ஷில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் பள்ளி ஆகியவற்றில் படித்த பல மாணவர்களின் வாழ்க்கையில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார். டிசோசாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக மேகாலயாவில் உள்ள அவரது சொந்த ஊரான ஷில்லாங்கிற்கு நாளை எடுத்துச் செல்லப்படும் என்று சாந்தி நிவாஸ் ஊழியர் சகோதரர் ஜான் விகாஸ் பிடிஐயிடம் தெரிவித்தார். Bigg Boss Tamil Season 8: ரஞ்சித், சச்சினா மீது பாயும் அம்புகள்; சர்ச்சையில் சிக்கும் ஜெப்ரி? அடுத்த அதகளத்தை கிளப்பும் பிக் பாஸ்.!
இந்த ஆண்டு ஜூன் மாதம், காங்கிரஸ் தலைவர் ஸாரிதா லைட்ப்லாங் சமூக ஊடகங்களில், நடிகர் ஷாருக்கான் தனது முன்னாள் ஆசிரியரை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தனது மாணவன் ஷாருக்கானை பார்க்காமலேயே இயற்கை எய்தி விட்டார். கல்வி மற்றும் கருணை மீதான அவரது அர்ப்பணிப்பு, தேசிய புகழைப் பெறுபவர்கள் உட்பட பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.