Oviya Leaked? நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்? பதறிப்போன ரசிகர்கள்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
செய்யாத குற்றத்திற்காக நடிகைகள் பாதிக்கப்படும் துயரம் தொடர்ந்து வருகிறது.
அக்டோபர் 13, சென்னை (Cinema News): கடந்த 2009ம் ஆண்டு வெளியான கங்காரு என்ற மலையாளத் திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை ஓவியா (Oviya Helen), தமிழில் நாளை நமதே திரைப்படத்தின் வாயிலாக என்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து, களவாணி படத்தில் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்டவர், முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர்கூடம், புலிவால், யாருமிருக்க பயமேன், 90 எம்எல், முனி 4: காஞ்சனா, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். Bigg Boss Tamil Season 8: சாச்சனாவை வச்சி செய்த விஜய் சேதுபதி; அடுத்தடுத்த கேள்விகளால் வறுத்தெடுப்பு.!
ஓவியா ஆர்மியை மறக்க முடியுமா?
கடந்த 2021ம் ஆண்டில் பிளாக் காபி என்ற மலையாள படத்தில் மட்டும் நடித்து இருந்தவர், 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தமிழில் பூமர் அங்கிள் படத்தில் நடித்திருந்தார். இரண்டு புதிய படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் அவர் நடித்து வந்தாலும், அவருக்கு வளர்ச்சி என்பது திரைத்துறையில் குறைவாகவே இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 (Bigg Boss Tamil)-ல் கலந்துகொண்ட நடிகைக்கு, ஓவியா ஆர்மி (Oviya Army) என்ற மிகப்பெரிய வரவேற்பும், அடையாளமும் கிடைத்தது.
ஓவியா லீக் (Oviya Leaked):
இந்நிலையில், நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ளது என நெட்டிசன்கள் பலரும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த வீடியோவில் ஓவியா போல உருவ ஒற்றுமை கொண்ட, அடையாளம் இருக்கும் பெண் ஒருவர், ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கிறார். இதனை வீடியோவை எடுத்து வைத்த நபர்கள், ஓவியாவின் பெயரை கூறி வைரலாக்கி வருகின்றனர். சிலர் இது டீப் பேக் வீடியோ என கூறி வருகின்றனர்.
அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கோரிக்கை:
இதுபோன்ற எம்.எம்.எஸ் லீக் போன்ற விஷயங்களால் நடிகைகள் படும் இன்னல்கள் ஏராளம் என்றும் கூறலாம். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி என திரைத்துறையில் பணியாற்றி வரும் பல நடிகைகள், இவ்வாறான மோசடி கும்பலின் கேவலமான செயல்பாடுகளால் பல துயரத்தை அடைந்துள்ளனர். அதேபோல, நடிகை ஓவியாவுக்கும் தற்போது நடந்துள்ளது என ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இவ்வாறான செயல்களை தடுக்க சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பொய்யான பெயர்களில் செயல்பட்டு வரும் சில ஐடிகளில் இருந்தே இவை தொடர்ந்து பகிரப்படுகின்றன.
துணிச்சல் மிகுந்த தமிழ் நடிகைகளில் ஒருவரான ஓவியா, இவ்வாறான விஷயங்களை பெரிய அளவில் எடுத்துக்கொள்ள மாட்டார் எனினும், அவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதே, நாளை மற்றொரு நடிகை இவ்வாறான செயலால் பாதிக்கப்படாமல் இருக்க வழிவகை செய்யும் என்பதே நிபுணர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
சர்ச்சை வீடியோவை பகிருவதாக கூறும் நபர்:
இணையத்தில் ஓவியா லீக் ட்ரெண்டிங் விஷயம் குறித்து பதிவிட்டுள்ள நபர்: