Vanangaan Actress Issue: துணை நடிகைக்கு கன்னத்தில் பளார் விட்ட ஒருங்கிணைப்பாளர்; பாலாவின் வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் சம்பவம்.!
தனது படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகையர்கள் சரியான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்றால், ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்து அடித்து வேலை வாங்கி திரையில் அவர்களை ஜொலிக்கவைப்பது இயக்குனர் பாலாவின் பழக்கம்.
மார்ச் 21, கன்னியாகுமரி (Cinema News): தமிழ் திரையுலகில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை உட்பட எண்ணிவிடும் படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், காலத்தால் அழிக்கப்பட வாய்ப்பில்லாத படங்களை தேடித்தேடி திரைத்துறைக்கு கொடுத்தவர் இயக்குனர் பாலா (Director Bala).
இவரின் படங்களில் நடிக்கும் நடிகர்கள் தங்களின் உடல் உழைப்பை கடுமையாக பதிவு செய்ய வேண்டும் என்பது திரைமறைவில் அவர்களுக்கு கொடுக்கப்படும் சவால் ஆகும். இவரது ஒரு படத்தில் ஒத்துழைப்பு கொடுத்து நடித்துவிட்டால், அவர்கள் கட்டாயம் மேன்மையை மட்டுமே சந்திப்பார்கள். இயக்குனரின் எதிர்பார்ப்பு நடிகரின் உடல்நிலையை மோசமாக்கினாலும், எந்த சவாலையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் திறன் வந்துவிடும். Aga Naga Song: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் அக நக பாடல் வெளியீடு.. யூடியூப்பில் தொடர்ந்து ட்ரெண்டிங்..!
சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் சூர்யாவுடன் (Actor Surya) இயக்குனர் பாலா மீண்டும் இணைந்து வணங்கான் படம் திரையாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், அதற்கான முன்னோட்ட பணிகள் நடைபெற்று, சூர்யா படத்தில் தான் நடிக்கவில்லை என கூறி வெளியேறினார்.
இதனையடுத்து, வணங்கான் நாயகனாக அருண் விஜய் (Actor Arun Vijay) தேர்வு செய்யப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அப்போது, வணங்கான் திரைப்படத்தில் நடிக்கவந்த துணை நடிகை லிண்டாவை ஒருங்கிணைப்பாளர் ஜிதின் கன்னத்தில் அறைந்ததாக பகீர் சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்காக காயம்பட்ட துணை நடிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால், லிண்டா படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்காமல் சென்றுவிட்டார் என கூறி ஒருங்கிணைப்பாளர் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 08:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

