Director K Viswanath Died: பழம்பெரும் இயக்குனர் பத்மஸ்ரீ கே. விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் குடும்பத்தினர், திரையுலகம்.!

இராஜபாட்டை, சிங்கம் 2, லிங்கா, உத்தமவில்லன், யாரடி நீ மோகினி உட்பட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகரும், பிரபல இயக்குனருமான கே. விஸ்வநாத் இயற்கை எய்தியதால் திரையுலகமே சோகமாகியுள்ளது.

Director K Viswanath Died: பழம்பெரும் இயக்குனர் பத்மஸ்ரீ கே. விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் குடும்பத்தினர், திரையுலகம்.!
Padma Shri K.Viswanath, Director & Actor(Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 03, ஹைதராபாத்: தமிழில் சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் கே. விஸ்வநாத் (Director K. Viswanath). இவர் பத்மஸ்ரீ (Padma Shri), தாதாசாகேப் பால்கே விருது (Dada Saheb Phalke Award) பெற்ற இயக்குனர்களில் ஒருவராவார். தெலுங்கு சினிமாவில் பிரதானமாக அறியப்பட்ட கே. விஸ்வநாத், தமிழில் பல படங்களில் அப்பா, தாத்தா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குருதிப்புனல், பகவதி (Bagavathi) படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம், புதியகீதை, இராஜபாட்டை, சிங்கம் 2, லிங்கா (Lingaa), உத்தமவில்லன், தனுஷுடன் (Dhanush) இவர் யாரடி நீ மோஹினி (Yaaradi Nee Mohini) திரைப்படத்தில் நயன்தாராவுக்கு (Nayanthara) தாத்தாவாக நடித்திருப்பார் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தெலுங்கானா (Telangana) மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் (Hyderabad) தனது குடும்பத்தோடு வசித்து வந்த கே. விஸ்வநாத், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட நோயால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92 ஆகிறது. சினிமா துறையில் அவர் பல விருதுகளை வென்று, மக்களின் மனதிலும் நின்று இன்று இயற்கை எய்தியுள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் தங்களின் இரங்கலை ட்விட்டர் பக்கத்தில்  (#RIPVishwanathGaru , #RipLegend) என தெரிவித்து வருகின்றனர். Girl Smashed Young man: நான் உனக்கு பொண்டட்டியா?? – நடுரோட்டில் இளைஞரை புரட்டியெடுத்த சிங்கப்பெண்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 08:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).