Bison Kaalamaadan: 'நீங்க தான் பைசன்' - இயக்குநர் மணிரத்னம் பாராட்டு.., மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு..!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' படத்தை இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.
அக்டோபர் 29, சென்னை (Cinema News): இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் பைசன் (Bison). இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பைசன் படம் வெளியான நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Bigg Boss 9 Wild Card: பிக் பாஸ் வைல்ட் கார்டில் பாக்கியலட்சுமி நடிகை.. இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது.!
இயக்குநர் மணிரத்னம் பாராட்டு:
இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார். இதுகுறித்த அவர் கூறுகையில், "இப்போ தான் படம் பார்த்தேன் மாரி. படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க தான் பைசன். உன் படைப்பை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். இதனைத் தொடர்ந்து செய். உன் குரல் தான் முக்கியம். இவ்வாறு இயக்குநர் மணிரத்னம் பாராட்டினார்.
நன்றி தெரிவித்த இயக்குநர் மாரி செல்வராஜ்:
இதனையடுத்து, இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், "பரியேறும்பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வாத்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.