அக்டோபர் 28, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 23 நாட்கள் கடந்துள்ளன. வீட்டில் இருந்து பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேறினர். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மன உளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். எந்த சீசனாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு, காதல், கிசுகிசு தொடர்பான பஞ்சாயத்துகள் இருக்கும். ஆனால், நடப்பு சீசனில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் செல்வதாக பல பகீர் குற்றசாட்டுகள் எழுந்து இருக்கின்றன. Bigg Boss Tamil 9 Elimination: பிக் பாஸில் எல்லை மீறிய செயல்கள்.. 3வது வாரத்தில் வெளியேறியது யார் தெரியுமா?
எல்லை மீறிய போட்டியாளர்கள்:
பிக் பாஸ் வீட்டிற்குள் நட்பு என வெளியே கூறினாலும், பிற நேரங்களில் போட்டியாளர்கள் சிலர் எல்லை மீறி செல்வது போல காட்சிகள் வெளியாகின. இவ்வாறான ஒரு சூழ்நிலையால் துஷாரின் வீட்டு தலைவர் பொறுப்பும் நேரடியாக பிக் பாஸால் பறிக்கப்பட்டு இருந்தது. இவ்வகை குற்றசாட்டுகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். இதன் பின் நடந்த வீட்டுத்தல போட்டியில் கனி வெற்றி பெற்று தலைமை பொறுப்பை கையில் எடுத்தார். ஆனால் கனி ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அவர்களது கூட்டத்திற்கு மட்டும் உதவுவதாகவும் பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது பிரவீன் வீட்டு தலையாக இருக்கிறார். பிக் பாஸ் மூன்றாவது வார சனி, ஞாயிறு கிழமைகளில் விஜே பார்வதி மற்றும் கம்ருதீனை விஜய் சேதுபதி ரோஸ்ட் செய்து பேசி இருந்தார். மேலும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் செயல்கள் குறித்தும் பேசப்பட்டது.
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் பாக்கியலட்சுமி நடிகை:
இதனை தொடர்ந்து எலிமினேஷன் ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தில் இருந்த ஆதிரை (Bigg Boss Aadhirai) வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் எல்லை மீறிய செயல்களால் பலரும் பிக் பாஸ் பார்ப்பதை தவிர்த்து வந்த நிலையில், அதனை மாற்றும் பொருட்டு தற்போது வைல்டு கார்டு (Bigg Boss Tamil Wild Card Entry) கண்டஸ்டண்டுகளாக சிலர் உள்ளே செல்கின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்த சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் (Divya Ganesh) பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு கண்டஸ்டன்ட்டாக செல்ல இருக்கிறார். அவரை தொடர்ந்து இன்னும் சில முக்கிய நபர்களும் செல்ல இருக்கின்றனர். பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பது தொடர்பான ப்ரோமோ வீடியோவையும் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் ஆட்டத்தை தொடங்கும் சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ்:
#பிக்பாஸ் இல்லத்தில்.. #DivyaGanesh 😍விரைவில்..
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV… pic.twitter.com/n6qCUIlnDG
— Vijay Television (@vijaytelevision) October 28, 2025