Vignesh Shivan Status: பாலிவுட்டில் கலக்கும் அட்லீ., ஜவான் படம் மிகப்பெரிய வெற்றி அடையும்; இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு.!

இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்க தீராது உழைத்துள்ளார். நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார் என்பதை அவரின் அறிமுகமே உறுதி செய்துள்ளது.

Vignesh Shivan Status: பாலிவுட்டில் கலக்கும் அட்லீ., ஜவான் படம் மிகப்பெரிய வெற்றி அடையும்; இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு.!
Vignesh Shivan Nayanthara (Photo Credit: Instagram)

ஜூலை 11, சென்னை (Cinema News): ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்கோத்ரா, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான்.

ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும் ஜவான் திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். அட்லீ படத்தின் இயக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னோட்ட காட்சிகளின் வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்திலும் படத்தில் நடித்துள்ள நிலையில், படம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படம் ரூ.220 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது. Gas Cylinder Stolen Video: சமையல் எரிவாயுவை திருடி ஓட்டமெடுத்த இளைஞர்; அடுத்த நடந்த சம்பவம்.. சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.!

படத்தின் முன்னோட்ட காட்சிகளின்படி, ஆக்சன்-த்ரில்லர் கதையம்சத்துடன் அட்டகாசமாக படம் தயாராகியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஜவான் படக்குழுவை பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்க தீராது உழைத்துள்ளார். நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார் என்பதை அவரின் அறிமுகமே உறுதி செய்துள்ளது. அனிரூத் வழக்கம்போல இசையில் கலக்கி இருக்கிறார். படக்குழுவுக்கு பாராட்டுக்கள்" என தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jul 11, 2023 08:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).