Gas Cylinder Stolen Video: சமையல் எரிவாயுவை திருடி ஓட்டமெடுத்த இளைஞர்; அடுத்த நடந்த சம்பவம்.. சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.!
சமையல் எரிவாயு டெலிவரி செய்ய வந்த நபரிடம் இருந்து இளைஞர் எரிவாயுவை திருடி ஓடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஜூலை 11, லக்னோ (Lucknow): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ஜரஹரா கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரின் மகன் குஷிராம். சம்பவத்தன்று அப்பகுதியில் சமையல் எரிவாயு டெலிவரி செய்யும் நபர் தனது வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
அங்குள்ள வீட்டிற்கு வெளியே 2 சிலிண்டர்களை இருசக்கர வாகனத்தில் மாட்டிவைத்து டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது, குஷிராம் விரைந்து வந்து யாரும் தன்னை நோட்டமிடுகிறார்களா? என கவனித்துள்ளார்.
அச்சமயம் அவர் சிலிண்டரை எடுத்து ஓட்டம் பிடித்தார். டெலிவரி நபர் தனது வாகனத்தில் இருந்த சிலிண்டரை காணாது திணறி, பின் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். Delhi Meerut Expressway Accident: பள்ளி பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் நேர்ந்த கோர விபத்து; காருடன் நேருக்கு நேர் மோதி 6 பேர் பரிதாப பலி.! அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வுசெய்தபோது உண்மை அம்பலமானது.
சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் தகவலை அறிந்து தலைமறைவான குஷிராம், நேற்று அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த திருட்டு சம்பவம் கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்றது.
#lucknow डिलीवरी मैन का सिलेंडर चोरी करता व्यक्ति तीसरी आंख में कैद @dcp_north के इंदिरा नगर थाना क्षेत्र जराहरा गांव के सरवन पुत्र खुशीराम ने चोरी को अंजाम दिया जो CCTV मे दिख रहा घटना 28 जून की है बे परवाह चोर घूम रहा पुलिस को दूसरी चोरी का इंतजार @lkopolice @LkoCp @Uppolice pic.twitter.com/ZQsD4F82u1
— up (@UpLucknow2) July 11, 2023
(The above story first appeared on LatestLY on Jul 11, 2023 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

