Vignesh Shivan - Nayan Babies Birthday: மகன்களின் பிறந்தநாளில் மனமுருகி நெகிழ்ச்சி தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன்; வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்.!

திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வாழ்ந்து வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தந்தை விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

Vignesh Shivan - Nayan Babies Birthday: மகன்களின் பிறந்தநாளில் மனமுருகி நெகிழ்ச்சி தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன்; வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்.!
Vignesh Shivan Nayanthara Couple with Babies (Photo Credit: Instagram)

செப்டம்பர் 27, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வந்த நடிகை நயன்தாரா. கடந்த 2003ல் படித்துக்கொண்டே பகுதிநேர மாடல் அழகியாக வலம்வந்த நயன்தாராவுக்கு, மனசினக்கரே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் முதலில் ஒரு படத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என தயக்கத்துடன் நயன்தாரா நடித்திருந்தாலும், அப்படம் வெளியான பின்பு மெகாஹிட் அடித்தது. இதனால் நயனுக்கு தொடர்ந்து திரை வாய்ப்புகள் குவிந்து வந்தன.

கடந்த 2005ல் தமிழில் அய்யா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி திரைப்படத்தின் வாயிலாக மாபெரும் வெற்றியையும் எட்டினார். இதனால் நயன்தாரா அன்றில் இருந்து லேடி சூப்பர்ஸ்டாராக கணிக்கப்பட்டார். Mathura EMU Train Accident: மின்சார இரயில் தடம்புரண்டு, நடைமேடையில் பாய்ந்ததால் பரபரப்பு: அதிர்ந்துபோன பயணிகள்..! 

Vignesh Shivan Nayanthara Family (Photo Credit: Instagram)

கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட காதல், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளை கடந்து 2022ல் திருமணத்தில் முடிந்தது.

அதனைத்தொடர்ந்து, தம்பதிகள் இருவரும் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் உயிர் ருத்ரோநீல் & உலக் டைவிக் என இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று அக்குழந்தைகளின் பிறந்தநாள் ஆகும்.

அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொருட்டு, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

(The above story first appeared on LatestLY on Sep 27, 2023 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).