செப்டம்பர் 27, மதுரா (UttarPradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா இரயில் நிலையத்திற்கு, நேற்று இரவு 10:39 மணியளவில் சாகுர் பாஸ்தி இரயில் நிலையத்தில் இருந்து மின்சார இரயில் வந்துகொண்டு இருந்தது.
இரவு நேரம் என்பதால் மின்சார இரயிலில் பயணிகள் யாரும் இல்லை. முந்தைய இரயில் நிலையத்திலேயே அனைவரும் இறங்கிவிட்டனர். இந்நிலையில், இரயில் மதுரா இரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. RBI Rules for Bank Account:அதிக வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு: ஆர்பிஐ விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.!
அப்போது, திடீரென இரயில் இயங்கி நடைமேடையில் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும், எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஓட்டுனருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், உடனடியாக ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர். சரக இரயில் நிலைய மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.
#WATCH | Uttar Pradesh: An EMU train coming from Shakur Basti derailed and climbed the platform at Mathura Junction. (26.09) pic.twitter.com/ZrEogmvruf
— ANI (@ANI) September 26, 2023