Shilpa Shetty and Raj Kundra: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி வழக்கு; ரூ.60 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..!
ரூ.60 கோடி பணமோசடி வழக்கில் (Money Laundering Case), நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 14, மும்பை (Cinema News): பணமோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா (Raj Kundra) மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் ஆர்யா என்ற முகவர் மூலம், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா இருவரும் தொழிலதிபர் தீபக் கோத்தாரியை அணுகியுள்ளனர். அப்போது, 12% வட்டிக்கு ரூ.75 கோடி கடன் வழங்குமாறு கோத்தாரியிடம் அவர்கள் கேட்டுள்ளனர். அதிக வட்டியைத் தவிர்க்க, இந்தக் கடனை 'முதலீடு' என்று மாற்றிப் பதிவு செய்துள்ளனர். மேலும், சரியான நேரத்தில் பணம் திருப்பித் தரப்படும் என உறுதியளித்து, முதலீடு செய்யுமாறு கோத்தாரியை அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். Coolie Review: கூலி படம் எப்படி இருக்கு?.. லோகேஷ் - ரஜினி கூட்டணி ஜெயித்ததா?.. மக்களின் விமர்சனம் என்ன?.!
பணமோசடி வழக்கு:
இதனை நம்பிய கோத்தாரி, 2015 முதல் 2023 வரை இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.60.48 கோடியை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் பணத்தை அவர்கள் தங்களது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 2016இல் ஷில்பா ஷெட்டி நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன் பிறகு, அந்நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தகவல்கள் எதுவும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கு விசாரணை:
இதுகுறித்து ஜூஹு காவல்நிலையத்தில் கோத்தாரி புகார் அளித்ததையடுத்து, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த வழக்கு மும்பை காவல்துறையினரின் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணையில் உள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)