Coolie Tamil Movie Review (Photo Credit : @beemji / @Itsme0911 X)

ஆகஸ்ட் 14, சென்னை (Chennai News): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கூலி. நடிகர்கள் சத்யராஜ், அமீர்கான், சுருதிஹாசன், உபேந்திரா உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். உலக அளவில் இன்று வெளியான திரைப்படம் முதலில் அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் காலை 4 மணி முதல் திரையிடப்பட்டு இருக்கிறது.

ரசிகர்கள் கொண்டாட்டம் :

அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட படத்தைக் காண ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர். இதனால் திரையரங்குகள் பலவும் விழாக்கோலம் (Coolie FDFS Celebration) பூண்டிருந்தன. நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சுருதிஹாசன், சாண்டி உட்பட பலரும் திரையரங்குக்கு நேரில் வந்து படம் பார்த்து வருகின்றனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே பிற மாநிலங்களில் படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்களும் வெளியாகி உள்ளன. Coolie FDFS Celebration: திரையரங்குகளில் வெளியானது 'கூலி'.. ரசிகர்கள் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் கொண்டாட்டம்.! 

முதல் பாதி முடிந்ததும் கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள் :

கூலி படம் பார்த்துவிட்டு மக்கள் கூறியது என்ன?

அந்த வகையில், லோகேஷ் கனகராஜன் விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கைதி, விக்ரம் போல மாஸாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்ததற்கு கூலி முற்றுப்புள்ளி வைத்ததாக (Coolie Public Review Tamil) தெரிவித்து வருகின்றனர். மேலும் லோகேஷ் கனகராஜின் முதல் தோல்வி படமாக கூலி உள்ளதாக எக்ஸ் வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர்களின் நடிப்பு நன்றாக இருந்தாலும், படத்தின் திரைக்கதை சுமாராக இருப்பதாகவும், லோகேஷ் கனகராஜின் சினிமா வாழ்க்கையில் முதல் முதலாக எடுத்த மோசமான படம் இதுதான் எனவும் விமர்சனம் செய்துள்ளனர். ஒருபுறம் நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும், மறுபுறம் பாசிட்டிவான விமர்சனங்களும் பதிவாகி வருகிறது.

கூலி படத்தின் நெகட்டிவ் விமர்சனம் :

சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்களின் விமர்சனம் :

ரஜினியின் ரசிகர்களை (Super Star Rajinikanth Fans Review) பொறுத்தவரையில், கூலி பிளாக்பஸ்டர் திரைப்படம். தலைவரின் அதிரடி ஆட்டம், சண்டை காட்சி, போனில் பேசும் காட்சி, அறிமுகக் காட்சி என அனைத்தும் தெறிக்கவிடும் வகையில் உள்ளது. இரண்டாம் பாதியை பொறுத்தவரையில் லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் இணைந்து வெறித்தனமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்தின் 50 ஆண்டுகள் திரை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கிய இடத்தை பிடிக்கும் எனவும் தெரிவித்து வருகின்றனர். Coolie: கூலி படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. லோகேஷ்-க்கு பாராட்டு.! 

ரஜினிகாந்தின் பிளாக்பாஸ்டர் திரைப்படம் :

தமிழ்நாட்டு மக்கள் கூலி திரைப்படம் குறித்து கூறியது என்ன ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிடிவ்வான விமர்சனங்களை பெரும்பாலும் கொடுத்து வரும் நிலையில், சிலர் படம் மொக்கையாக உள்ளது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் (Coolie Tamilnadu Peoples Review), லோகேஷ் கனகராஜின் சிறந்த படம். ரஜினிகாந்தின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை இப்படம் பிடித்துள்ளது என பாசிட்டிவான விமர்சனங்களே குவிந்து வருகிறது.

கூலி படம் குறித்து மக்களின் கண்ணோட்டம் எப்படி உள்ளது (Coolie FDFS Review) ?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் எப்படி உள்ளது ?

கூலியின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாவது பாதி லேசான மந்தத்துடன் செல்வதாகவும் சொல்லப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியானாலும், அனைத்து விதமான மக்களை கவரும் வகையான அம்சத்தில் கூலி படம் பின்தங்கியுள்ளதால் படத்துக்கு பாதியான மதிப்பெண் மட்டுமே கிடைப்பதாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பாக மக்கள் தெரிவித்த கருத்துக்கள் (Coolie Review Tamil) பின்வரும் வீடியோக்களில் உங்களுக்காக இணைக்கப்பட்டன.

கூலி படம் குறித்த மக்கள் கருத்து (Coolie Movie Review) :