Actress Engaged With Rashid: ‘அன்பே ஆருயிரே’ பட நடிகைக்கு விரைவில் திருமணம் – தனது நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கிறார்..!
தமிழ் ரசிகர்களால் ‘நிலா’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகை மீரா சோப்ராவுக்கு தனது காதலனுடன் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளது.
மார்ச் 08, மும்பை (Cinema News): தமிழில் ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா (Meera Chopra). இவர் ‘நிலா’ என்று ரசிகர்களால் அன்போடு அறியப்படுகிறார். தமிழில் மருதமலை, ஜாம்பவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்ற மீரா சோப்ரா, தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைபடங்களில் நடித்து வருகிறார். Child Brave Action: அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தையை சாதுரியமாக பூட்டிய சிறுவன் – வைரல் வீடியோ..!
காதல் திருமணம்: மீரா சோப்ராவுக்கு 40 வயது ஆன நிலையில், தனது காதலர் ரஷீத் கெஜ்ரிவாலை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த காதல் ஜோடிக்கு வருகிற 12- ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நட்சத்திர பங்களாவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமணத்தை பாரம்பரிய முறையிலும் பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த விழாவாகவும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருமண அழைப்பு: மேலும், வருகிற 11-ஆம் தேதி மாலை மெகந்தி விழாவும், 12-ஆம் தேதி ஹல்தி விழாவும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 4.30 மணியளவில் மீரா சோப்ரா- ரஷீத் கெஜ்ரிவால் ஆகியோரது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ளது. இத்திருமண விழாவிற்கு சில திரைப் பிரபலங்களுக்கும் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

