Child Brave Action (Photo Credit: @SoorajNoorani X)

மார்ச் 08, மும்பை (Mumbai News): மகாராஷ்டிர மாநிலம்  நாசிக் மாவட்டத்திலுள்ள மாலேகான் நகரில் சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நம்பூர் சாலையில் உள்ள திருமண மண்டப அலுவலகத்திற்குள் சிறுத்தை நுழைந்தது. அலுவலகத்தின் கதவு திறந்து இருந்ததால் நுழைவு வாயில் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்த நிலையில், அங்கு அலுவலகத்தில் இருந்த மோகித் விஜய் அகிரே (வயது 13), என்ற சிறுவன் தனது செல்போனில் (Smart Phone) விளையாடிக் கொண்டிருந்தான்.

சிறுவனின் துணிச்சல்: அலுவலகத்திற்கு நுழைந்த சிறுத்தை, அங்கு இருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள்ளே சென்றது. அந்த சிறுவன் சிறிதும் பயப்படாமல் உள்ளே நுழைந்த சிறுத்தையை கவனித்துக்கொண்டு அலுவலகத்திற்கு வெளியே சென்று கதவை மூடினான். இச்சம்பவம் காலை 7 மணியளவில் நடந்துள்ளது. இதனையடுத்து, சிறுத்தை புகுந்தது குறித்து வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயக்க ஊசி செலுத்தி, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டில் ஏற்றிச்சென்ற பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு: திருமண மண்டபத்தின் அலுவலக அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உள்ளே நுழைந்ததும், சிறுவன் அதனைக் கண்டு பயப்படாமல் வெளியே சென்று கதவை பூட்டு போட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. தற்போது, அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.