Actress Michelle Trachtenberg (Photo Credit: @PopCulture2000s X)

பிப்ரவரி 27, நியூயார்க் (Cinema News): 'பஃபி தி வாம்பயர் ஸ்லேயர்' மற்றும் 'காசிப் கேர்ள்' படங்களில் நடித்த பிரபல நடிகை மிச்செல் டிராட்சன்பெர்க் (Michelle Trachtenberg), தனது 39 வயதில் காலமானார். நேற்று (பிப்ரவரி 26) காலை டிராட்சன்பெர்க் தனது மன்ஹாட்டன் இல்லத்தில் மயக்கமடைந்து கிடந்துள்ளார். காலை 8 மணியளவில் நடிகையை அவரது தாயார் பார்த்துள்ளார். உடனே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். Leg Piece Trailer: அரசியலுடன் சர்ச்சை கேள்வி.. யோகி பானு, விடிவி கணேஷ் நடிக்க உருவாகியுள்ள 'லெக் பீஸ்' ட்ரைலர் இதோ.!

பிரபல நடிகை மறைவு:

இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், டிராக்டன்பெர்க் சமீபத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேலும், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். டிராட்சன்பெர்க்கின் எதிர்பாராத மறைவு ஹாலிவுட்டை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது ரசிகர்களும் சக ஊழியர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

9 வயதில் அறிமுகம்:

அக்டோபர் 11, 1985 அன்று, நியூயார்க் நகரில் பிறந்த டிராக்டன்பெர்க், இளம் வயதிலேயே புகழ் பெற்றார். நிக்கலோடியனின் தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பீட் & பீட்டில் 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் , அவர் ஹாரியட் தி ஸ்பை (1996) இல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.