TV Anchor Kidnaped for Marriage: பிரபல தனியார் டிவி தொகுப்பாளர் மீது ஒருதலைக்காதல்; இளைஞரை கடத்தி திருமணத்திற்கு முயற்சித்த இளம்பெண் கைது.!

டிவியில் பார்த்து காதலில் விழுந்து, வரன் தேடி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் நம்பர் பெற்று இளைஞரை துரத்தித்துரத்தி காதலித்த பெண்மணி கைது செய்யப்பட்டார்.

TV Anchor Kidnaped for Marriage: பிரபல தனியார் டிவி தொகுப்பாளர் மீது ஒருதலைக்காதல்; இளைஞரை கடத்தி திருமணத்திற்கு முயற்சித்த இளம்பெண் கைது.!
Gemini TV Anchor Pranav | Uppal Cop (Photo Credit: @TeluguScribe X)

பிப்ரவரி 24, ஹைதராபாத் (Telangana Crime News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிழக்கு ஹைதராபாத், உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரணவ். இவர் அம்மாநிலத்தில் பிரபலமான ஜெமினி தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக (Gemini TV Anchor Pranav) பணியாற்றி வருகிறார். படித்துக்கொண்டே பகுதிநேர வேலையை இவர் கவனித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் பெற்றோர் பிரணவின் திருமணத்திற்கு வரன் தேடும் வகையில், அவரின் புகைப்படத்தை திருமண இணையத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.

திருமணம் செய்ய திட்டம்: ஹைதராபாத்தில் தொழிலதிபராக வலம்வரும் பெண்மணி ஒருவர், தனது உண்மையான தோற்றத்தை மறைத்து எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்து பிரணவை மயக்கி திருமணம் செய்யலாம் என திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், அவரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. எப்படியாவது பிரணவிடம் பேசி அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட அந்த பெண்மணி, பிரணவின் செல்போன் நம்பரை பெற்று பேச தொடங்கியுள்ளார். Shocking Video: பேருந்தின் நடுவே அமர்ந்து மகிழ்ச்சியாக மதுகுடிக்கும் குடிகார கூட்டம்; அதிர்ச்சி வீடியோ வைரல்.! 

கடத்தப்பட்ட தொகுப்பாளர்: பெண்ணின் எந்த செயல்பாடுகளுக்கும் கண்டுகொள்ளாத பிரணவ், தொடர்ந்து தனது வேலையை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பெண்மணி பிரணவை கடத்திச்சென்று திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். நால்வர் கும்பல் உதவியுடன் பிரணவ் கடத்தி செல்லப்பட்டு பெண்ணால் தாக்கப்பட்டு இருக்கிறார். அங்கிருந்து சாமர்த்தியமாக தப்பி வந்த பிரணவ், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண் கைது & கும்பலுக்கு வலைவீச்சு: புகாரை ஏற்ற உப்பல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அவர் 30 வயதுடைய திரிஷா என்பது உறுதியானது. இவர் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இவருக்கு உடந்தையாக இருந்த நால்வர் கும்பல் குறித்து அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Feb 24, 2024 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).