Michael Gambon: ஹாரி பார்ட்டர் புகழ் நடிகர் 82 வயதில் நிமோனியாவால் காலமானார்; திரையுலகினர் சோகம்.. ரசிகர்கள் கண்ணீர்.!

நடிகர்கள் பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும், அவர்களுக்கான அடையாளங்களை வழங்குவது சில திரைப்படங்களே ஆகும். அவ்வகையில், ஹேரி பார்ட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் காலமானார்.

Michael Gambon: ஹாரி பார்ட்டர் புகழ் நடிகர் 82 வயதில் நிமோனியாவால் காலமானார்; திரையுலகினர் சோகம்.. ரசிகர்கள் கண்ணீர்.!
Michael Gambon (Photo Credit: Twitter)

செப்டம்பர் 28, இலண்டன் (Cinema News): பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜெ.கே ரவ்லிங் நாவலை அடிப்படையாக கொண்டு, ஹாரி பார்ட்டர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எட்டு பாகங்களாக வெளியிடப்பட்டது.

வார்னர் பிரதர்ஸ் தயாரித்து வழங்கிய திரைப்படத்தில், நாயகனாக நடிகர் டேனியல் ரெட்கிளிப் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரங்களில் எம்மா வாட்சன், ரூபர்ட் கிரிண்ட், டாம் பெல்டான் உட்பட பலரும் நடித்திருந்தனர். College Principal under Suspension: உதகையில் மாணவர்களிடம் லஞ்சம்: வெளியான ஆதாரங்கள்: கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் சஸ்பெண்ட்.!

இப்படத்தில் வரும் டம்புல்டோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மைக்கேல் கேம்பான். இவர் அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார்.

தற்போது 82 வயதாகும் நடிகர் மைக்கேல், வயது மூப்பு மற்றும் நிமோனியா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் மறைவு ஹாரிபார்ட்டர் திரைப்பட நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

(The above story first appeared on LatestLY on Sep 28, 2023 07:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).