Ooty Government College Principal (Photo Credit: Twitter)

செப்டம்பர் 28, நீலகிரி (TamilNadu News): நீலகிரி மாவட்டம் உதகையில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கே மாணவர்கள் விருப்பமான துறைக்கு மாறுவதற்கும், விடுதியில் தங்குவதற்கும் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

முதற்கட்ட கலந்தாய்வில் மாணவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் இடம் கிடைக்காததால், அவர்கள் முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்து கொள்கின்றனர், பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளில் காலியிடங்கள் உருவாகும் போது, கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டு அவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளில் சேர்ந்து கொள்கின்றனர். India’s Oscar Entry: உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாள திரைப்படம்: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை.!

இவ்வாறு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைக்கு மாறுவதற்கு பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பணம் வாங்கியதற்கான கூகுள் பே (Google Pay) ஆதாரங்களை மாணவர்கள், கல்லூரி கல்வி இயக்குனரகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழக டிஜிபி தமிழக டிஜிபி ஆகியோருக்கு இணையத்தில் பகிர்ந்து புகாரை பதிவு செய்திருக்கின்றனர்.

உயர்கல்வித்துறை அதிகாரிகள் இந்த புகார் தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.

அதற்கிடையே மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்பதற்கு, கல்லூரி முதல்வர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்நிலையில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி மற்றும் பேராசிரியர் ரவி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.