Actress Samantha Tattoo (Photo Credit : @bollybubble X)

ஜூன் 08, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த சமந்தா, தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து பின் விவாகரத்து செய்தார். நாகசைதன்யா தற்போது தனது நீண்ட கால தோழியை கரம் பிடித்து மகிழ்ச்சியாக வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா தனது முதுகில் குத்தி இருந்த YMC என்ற டாட்டூவை நீக்கியதாக கூறப்பட்டது. Kamal Haasan Net Worth: இதுதான் விஷயமா? கமல் சொத்து மதிப்பு தெரியுமா? அதிகாரப்பூர்வமாக வெளிவந்த உண்மை.!

டாட்டூவை நீக்கிய சமந்தா?

நாகசைதன்யாவும், சமந்தாவும் இணைந்து நடித்த YMC திரைப்படத்தின் டாட்டூவை அவரின் நினைவாக சமந்தா குத்தி இருந்த நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் அது இல்லை என கூறப்படுகிறது. இந்த விஷயத்தால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அது விளம்பரத்துக்காக மறைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். இதனால் தனது முதல் கணவரை சமந்தா முற்றிலும் மறந்து விட்டாரா? என்று கேள்விகளும் எழுப்பப்பட்டன.

நெட்டிசன்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி :

இந்த நிலையில், அவர் சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் YMC என்ற டாட்டூ நீக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் உண்மை தெரியாமல் உளறிக்கொண்டிருந்த நெட்டிசன்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தாவின் வீடியோ :

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)