
ஜூன் 07, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் உலக நாயகனாக அறியப்படும் நடிகர் கமல்ஹாசன் (Ulaganayagan Kamal Haasan). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊழல், மதவாதம் செய்யும் அரசியலை கடுமையாக எதிர்த்து மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) என்ற கட்சியை தோற்றுவித்தவர், தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். அவ்வப்போது மநீம கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கட்சி தொடங்கும்போது திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறியவர், இறுதியில் அவர்களின் துணையுடன் மாநிலங்களவை உறுப்பினராகும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இதுவரை திரையில் மட்டும் எதிரொலித்து வந்த கமலின் குரலும், சொல்லதிகாரமும் இனி மாநிலங்களவையில் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக்கப் பொருட்களை சாப்பிட்டதால் விபரீதம்?.. 24 வயது இன்ஸ்டா பிரபலம் பரிதாப மரணம்.. ரசிகர்களுக்கு ஷாக்.!
கமல் ஹாசன் சொத்து மதிப்பு தெரியுமா? (Actor Kamal Haasan Net Worth Latest News):
இந்நிலையில், நேற்று தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடிகர் கமல்ஹாசன், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் முன்பு மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் திமுக வேட்பாளர்களான வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர் சிவலிங்கம் ஆகியோரும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். அப்போது, நடிகர் கமல்ஹாசன் தனது சொத்து விபரங்களையும் வேட்பு மனுவில் அரசின் விதிப்படி பதிவு செய்துள்ளார். அதன் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தனது சொத்து மதிப்பு குறித்து கமல் தெரிவித்த அதிகாரப்பூர்வ தகவல் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.
- 2023 - 2025ம் நிதியாண்டின் வருவாய்: ரூ.78.90 கோடி
- அசையும் சொத்து மதிப்பு: ரூ.59.69 கோடி
- ஒட்டுமொத்த அசையா சொத்து மதிப்பு: ரூ.245.86 கோடி
- கடன் தொகை: ரூ.49.67 கோடி
- கையிருப்பு ரொக்கம்: ரூ.2.60 லட்சம்
- கார்கள்: மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யு, லக்ஸஸ்
- கார்களின் மொத்த மதிப்பு: ரூ.8.43 கோடி