Cooku With Comali 6: குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் இடம்பெற்றது யார்? முழு விபரம் உள்ளே.!

மக்களின் சிரிப்புடன் புதிய சமையலை அறிமுகப்படுத்த குக்கு வித் கோமாளி சீசன் 6 (Cooku With Comali Season 6 Tamil) நேற்று முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Cooku With Comali 6: குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் இடம்பெற்றது யார்? முழு விபரம் உள்ளே.!
Cooku with Comali Season 6 Tamil (Photo Credit: @VijayTelevision X)

மே 05, சென்னை (Television News): விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி 6 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. நேற்று (மே 04) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையில் இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும். முதல் நாள் ஒளிபரப்பு நிகழ்ச்சியின்போது, செப் தாமு தனக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதை நேரில் பெறச் சென்றதால் பங்கேற்க இயலவில்லை. அடுத்தடுத்த காட்சிகளில் அவர் தோன்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் முந்தைய தலைமுறை Vs இன்றைய தலைமுறைக்கு இடையே போட்டி நடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நடப்பு சீசன் சுவாரஷ்யமான வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Goundamani Wife Death: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார் - சோகத்தில் குடும்பத்தினர்..! 

நடுவர்கள்: செஃப் தாமு, செஃப் கெளஷிக், மாதம்பட்டி ரங்கராஜ்.

தொகுப்பாளர்: ரக்சன்

கோமாளிகள்: பிக் பாஸ் சவுந்தர்யா, குரேஷி, புகழ், ராமர், டாலி, சரத், சுனிதா, பூவையார், சர்ஜுன், பழைய ஜோக் தங்கதுரை.

போட்டியாளர்கள்: சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் பட பிரபலம் உமர் லத்தீப், நந்த குமார், செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, நடிகை மதுமிதா, சுந்தரி அக்கா, சௌந்தர்யா சிலுகுரி, பிக் பாஸ் ராஜு மோகன், கஞ்சா கருப்பு.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் லான்ச் வீடியோ:

(The above story first appeared on LatestLY on May 05, 2025 10:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).