April 26 Release Tamil Movies: ஏப்ரல் 26 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.. திரை ரசிகர்களே கொண்டாடுங்கள்.!
திரை ரசிகர்களுக்கு பஞ்சமே இல்லாத படங்களை வாரி வழங்கிய தமிழ் திரையுலகில், இம்மாதம் 26ம் தேதி ரிலீசாகும் படங்கள் குறித்த அறிவிப்பை உங்களுக்காக வெளியிடுகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஏப்ரல் 24, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் ஆண்டுக்கு 200 க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகிறது. ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும், வார இறுதியை முன்னிட்டு படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது இயல்பு. இதில் பண்டிகை போன்ற பொதுவிடுமுறைகளில் முக்கிய நடிகர்களின் படங்கள் முன்னணி பெரும். அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி வெளியாகும் படங்கள் குறித்த தகவலை இங்கு காணலாம்.
ரத்னம் (Ratnam): தமிழக மக்களின் நெஞ்சார்ந்த ஆதரவை பெற்ற இயக்குனர் ஹரி, நடிகர் விஷால் கூட்டணியில் தாமிரபரணி, பூஜை திரைப்படங்களுக்கு பின்னர் உருவாகியுள்ள திரைப்படம் ரத்னம் (Ratnam). இப்படத்தில் நடிகர்கள் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு, கெளதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, விஜயகுமார், லிவிங்ஸ்டன், முத்துக்காளை, மீசை ராஜேந்திரன் உட்பட பலரும் நடித்துள்ளனர். Prevent Dehydration on Summer: கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சனைகள்; காரணம், அறிகுறி, தடுக்கும் வழிமுறைகள் இதோ.!
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரத்னம் படத்தை, ஐங்கரன் இன்டர்நெஷனல் படம் வெளியிடுகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து கொடுத்துள்ளார். இப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 26 ஏப்ரல் 2024 அன்று திரையரங்கில் வெளியாகிறது. ஏப்ரல் 26ல் வெளியாகும் பெரிய நடிகர்களின் பட்டியலில் விஷால் மட்டுமே தற்போது வரை இணைந்து இருப்பதால், இப்படம் வெற்றிப்படமாகிவிடும் என படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு நொடி (Oru Nodi): தமன் குமார், எம்.எஸ். பாஸ்கர், பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சினி, வேல ராமமூர்த்தி உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம்-தில்லர் திரைப்படம் ஒருநொடி. பி. மணிவண்ணன் இயக்கத்தில், கே.ஜி ராதேஷ் ஒளிப்பதிவில், குரு சூர்யா எடிட்டிங்கில், சஞ்சய் மாணிக்கம் இசையில் உருவாகியுள்ள திரைப்படம், 26 ஏப்ரல் 2024 அன்று திரையில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
ஒருநொடி படத்தின் டிரைலர் வீடியோ:
(The above story first appeared on LatestLY on Apr 24, 2024 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

