Dehydration (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 24, சென்னை (Health Tips): பருவமழை ஓய்ந்து கோடைகாலம் (Summer Season) தொடங்கிவிட்டால், பலருக்கும் சிறுநீர் எரிச்சல் (Urination Problem on Summer) எனப்படும் நீர்க்கடுப்பு, சிறுநீரக கற்கள் சார்ந்த பிரச்சனை ஏற்பட தொடங்கிவிடும். மழை காலங்களில் காற்றின் ஈரப்பதம் நமக்கு தாகத்தின் அளவை அதிகரிக்காது எனினும், கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பநிலை நமது உடல் நீரை அதிகளவு உறிஞ்சும் (Dehydration). இதனால் கோடையில் நீர் குடிக்காமல் இருக்கும் பட்சத்தில், உடலில் இருந்து வெளியேறும் வியர்வை மற்றும் சிறுநீரின் அளவு குறைந்து நீர்க்கடுப்பு உண்டாகும்.

நீர்கடுப்புக்கான காரணங்கள்: அதிக நேரம் வெயிலில் நின்று கோடையில் வேலைசெய்வோர், உடலுக்கு தேவையான நீர்சத்து ஆதாரங்களை எடுத்துக்கொள்வதை பட்சத்தில் சிறுநீரின் அடர்த்தி முதலில் அதிகமாகி, பின் அடர் மஞ்சள் நிறத்துடன் சிறுநீர் வெளியேறும். இதன்போது சிறுநீரக பகுதியில் எரிச்சல், வலி, நீர்க்கடுப்பு போன்றவை உண்டாகும். இக்காலங்களில் இரயில், பேருந்து உட்பட பிற வாகனங்களில் நெடுந்தூர பயணம் செய்வோர், சிறுநீரை அடக்கி வைத்துக்கொண்டு பயணித்தாலும் நீர்க்கடுப்பு ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் இருக்கும் கிருமிகள் பெருகி, ஈகோலை என்னும் பாக்டீரியா உண்டாகி நீர்க்கடுப்பு நோயும் ஏற்படும். ஆண்களைவிட பெண்கள் சிறுநீரை அதிகம் அடக்கும் தன்மை கொண்டவர்கள் எனினும், இதனால் அதிக பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. Tamilnadu Farmers Protest in Delhi: செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்; பரபரப்பாகும் டெல்லி வட்டாரம்.! 

Heat Wave (Photo Credit: Pixabay)

நீர்கடுப்பின் அறிகுறிகள்: அவ்வப்போது சிறுநீர் கழிக்கவும் உணர்வு, சிறுநீர் கழிக்க முயன்றாலும் எரிச்சல் மற்றும் கடுப்புடன் நீர் வெளியேறுதல், அடிவயிறு வலி, குழந்தைகள் தன்னை அறியாது சிறுநீர் கழித்தல், திடீர் குளிர் காய்ச்சல் போன்றவை நீர்கடுப்பின் அறிகுறியாக கவனிக்கப்படுகிறது. கோடையில் நீர் குடிக்காமல் சிறுநீரின் அளவு குறையும் பட்சத்தில், சிறுநீரக செயல்பாடு காரணமாக உப்பு கலந்த கழிவுப்பொருள் முழுமையாக உடலில் இருந்து வெளியேறாமல் தேங்கி நின்று கற்களும் உண்டாகும்.

தவிர்க்க வழிமுறைகள்: சிறுநீர் கடுப்பு, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனை உண்டாகாமல் இருக்க உடலுக்கு தேவையான நீரை நாம் கட்டாயம் குடிக்க வேண்டும். கோடையில் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இவை மட்டுமே சிறுநீர் சரியாக வெளியேறி கிருமிகளை விரட்டவும் உதவி செய்யும். அதேபோல, சிறுநீரகத்தில் உள்ள சிறுசிறு உப்புகளும் வெளியேறி கற்கள் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளும். Aval Milk Keer Recipe: அவல் பால் கீர் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..! 

சாப்பிட வேண்டியவை: மோர், பழைய கஞ்சி நீர், இளநீர், உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் பழங்கள் மற்றும் பழச்சாறுகள், கேரட், முள்ளங்கி போன்ற நீர்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களும் அதிக நீர் குடிக்க வேண்டும். சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவ்வப்போது நீர் சத்து நிறைந்த உணவுகளை வழங்கி, அவர்கள் சிறுநீர் கழிப்பதை உறுதி செய்தாலே எந்த பிரச்சனையும் ஏற்படாது.

கோடை காலங்களில் உடல்நலம் சார்ந்த பிரச்சனை இருப்பின், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும் நல்லது.