Ileana D'Cruz Baby: அடடே.. நம்ம இடுப்பழகி இலியானாவின் குழந்தையை பார்த்தீங்களா?.. எவ்ளோ கியூட் செல்லம்.!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் இலியானாவின் காதலர் யார் என்ற உண்மை இன்று வரை வெளியுலகத்திற்கு தெரியாத நிலையில், திருமணம் செய்யாமல் நடிகை எமி ஜாக்சன் காதலருடன் இணைந்து குழந்தையை பெற்றெடுத்து போல, இலியானாவுக்கு காதலரை மறைத்து வைத்து குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 07, சினிமா செய்திகள் (Cinema News): இந்திய - போர்ச்சுகீசிய நடிகையான (Indian-Portuguese actress) இலியானா டி-குரூஸ் (Ileana D'Cruz) தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை ஆவார். கடந்த 2006-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான தேவதாசு திரைப்படத்தின் மூலமாக பெரிதும் கவனிக்கப்பட்டு, பல விருதுகளையும் பெற்றார்.
அதே ஆண்டில் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்த நடிகை இலியானா, கேடி திரைப்படம் மூலமாக 2006ல் தமிழுக்கும் அறிமுகமானார். ஆனால், அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலேயே பிற்காலத்தில் அதிகளவு நடிக்க தொடங்கினர். அவரின் அழகிய இடையை காண சிம்ரனை போல ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. Delhi AIIMS Fire: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
இதற்கிடையில், கடந்த 2012ம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது அவரின் நடிப்பில் உருவாகியுள்ள Unfair & Lovely படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இலியானா பிரபலம் ஒருவருடன் பழகி வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரின் துணை யார் என்ற விஷயத்தை மறைமுகமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி Koa Phoenix Dolan என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார். பலதரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இன்று வரை அவர் தனது காதலர் குறித்த விஷயத்தை மறைத்தே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Aug 09, 2023 10:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

