Delhi AIIMS Fire: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
இந்திய அளவில் மிகப்பெரிய மருத்துவமனை நிர்வாகங்களில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது வரை அனைவரும் மீட்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 07, புதுடெல்லி (NewDelhi): புதுடெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து அங்குள்ள Endoscopy அறையில் விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. தீ பரவியதை தொடர்ந்து, கரும்புகை வெளியானதால், மக்கள் அவசர கதியில் அங்கிருந்து வெளியேறினர். IND Vs WI: 12 ஆண்டுகளில் இல்லாத அளவு தோல்வியை கண்ட மேற்கிந்திய தீவுகள் அணி; இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்.!
தீ விபத்து குறித்து தீயணைப்பு & மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு 6 வாகனங்களில் விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற விபரங்கள் காத்திருக்கின்றன.
#WATCH | Delhi: A fire broke out in the endoscopy room of AIIMS. All people evacuated.
More than 6 fire tenders sent, say Delhi Fire Service
Further details are awaited. pic.twitter.com/u8iomkvEpX
— ANI (@ANI) August 7, 2023
(The above story first appeared on LatestLY on Aug 07, 2023 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

