Rajkiran Daughter Priya Crying Video: முடிவுக்கு வந்த நடிகர் ராஜ்கிரண் மகளின் காதல் கல்யாணம்.. கைவிட்ட கணவர் முனீஸ்ராஜா.. வைரலாகும் ராஜ்கிரண் மகள் வீடியோ..!

சீரியல் நடிகர் முனிஷ் ராஜாவை காதலித்து, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டதாக கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajkiran Daughter Priya Crying Video: முடிவுக்கு வந்த நடிகர் ராஜ்கிரண் மகளின் காதல் கல்யாணம்.. கைவிட்ட கணவர் முனீஸ்ராஜா.. வைரலாகும் ராஜ்கிரண் மகள் வீடியோ..!
Priya & Munish Raja (Photo Credit: @News18TamilNadu @dinamalarcinema X)

பிப்ரவரி 01, சென்னை (Chennai): நாதஸ்வரம் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. இவருக்கும் நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கும், முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தனக்கு பிடித்த வாழ்க்கையை தேடி போவதாக கூறிவிட்டு, பெற்றோர்களை மீறி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகின.

நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கை: தொடர்ந்து ஒரு கட்டத்தில், மகளின் திருமண செய்தி குறித்து நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையில், "தனக்கு நைனார் முகம்மது என்கிற மகன் மட்டுமே. அவரைத்தவிர வேறு எதுவும் பிள்ளைகள் இல்லை. ஜீனத் பிரியா தனக்கு பிறந்த மகள் இல்லை. அவர் தனது வளர்ப்பு மகள். இனி அவருக்கும் எனது குடும்பத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமின்றி ஜீனத் பிரியா திருமணம் செய்துகொண்ட முனீஸ்ராஜா, மகா மட்டமான புத்தி கொண்டவர், அவர் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனம் கொண்டவர்" என குறிப்பிட்டிருந்தார். IND Vs ENG Test: 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு... அறிமுக வீரராக களமிறங்கும் பஷீர்..!

வைரலாகும் ராஜ்கிரண் மகள் வீடியோ: இந்நிலையில் தற்போது காதல் கணவரை ஓரே வருடத்தில் பிரிந்து விட்டதாக, ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லோருக்கும் வணக்கம். நான் பிரியா. ராஜ்கிரண் சாரின் வளர்ப்பு மகள். நான் 2022-ல் நடிகர் முனீஸ்ராஜாவை திருமணம் செய்தேன். அது மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த கல்யாணத்துக்கு அப்பறம், இப்போது பிரிந்துவிட்டோம். பிரிந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. இது சட்ட பூர்வமான திருமணம் கிடையாது. இந்த திருமணத்திற்காக என் அப்பாவை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன். நான் இவ்வளவு செய்த போதும் கூட, எனக்கு ஒரு பிரச்னை என வந்த போது என் தந்தை சத்தியமாக வந்து உதவினார். இது நான் எதிர்பாராத கருணை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்று கூறியுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Feb 02, 2024 11:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).