DJ Arrested: லிவிங் டுகெதர் வாழ்க்கையால், தமிழ் துணை நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. டிஜே கைது.!
லிவிங் டுகெதர் காதலியிடம், தனிமை விடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த டிஜே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை அண்ணா நகரில் நடந்துள்ளது.
நவம்பர் 28, அண்ணா நகர் (Cinema News): சென்னையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு டிஜே ஷியாம் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இதனிடையே, ஒருகட்டத்தில் இருவரும் காதலை பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.
கம்பி நீட்ட நினைப்பு:
இதனால் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்யாமலேயே லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், தனிமை காட்சிகளை பதிவு செய்துகொண்டதாகவும் தெரியவருகிறது. இதனிடையே, திருமணம் குறித்து துணை நடிகை கூறியபோது, டிஜே ஷியாம் கம்பி நீட்ட நினைத்துள்ளார். Divya Prabha’s Nude Scene: பிரபல நடிகை திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி லீக்.. இணையத்தில் வீடியோ வைரல்.!

பணம், நகை பறிப்பு:
மேலும், இருவரும் ஒன்றாக பழகிய நாட்களில் எடுக்கப்பட்ட தனிமை காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும், திருமணம் குறித்து வற்புறுத்தினால் இணையத்தில் வீடியோ வெளியிடப்படும் எனவும் மிரட்டிய ஷியாம், ரூ.6 இலட்சம் பணத்தை பறித்துள்ளார், மேலும், நகைகளையும் துணை நடிகையிடம் இருந்து கட்டாயப்படுத்தி பறித்து இருக்கிறார்.
டிஜே கைது:
முதலில் மிரட்டலுக்கு பயந்து பணம், நகை கொடுத்த துணை நடிகை, மிரட்டல் தொடர்ந்த காரணத்தால் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், டிஜே ஷியாமை கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

