Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.!
உயிருக்கு உயிரான காதலில் தோல்வி மன வலியை தரும் எனினும், அது காதல் கொண்ட நபர் மற்றும் அவர்களின் நண்பர்களால் நேரடியாக வரும்போது பாதிக்கப்பட்ட நெஞ்சம் குமுறி மாணவி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ஜூன் 19, திருவனந்தபுரம் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், திருக்கண்ணபுரம், நிஜலிகோணம் (Trivandrum Instagram Influencer Dies by Suicide) பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்ஸ்டாகிராம் செயலில் பிரபலமாக இருந்து வந்த சிறுமி, அங்குள்ள வட்டாரங்களில் நன்கு பரிட்சயமான நபராகவும் இருந்துள்ளார். இவர் பினோய் என்ற நபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதல் ஜோடி இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிடவே, சமீபத்தில் தனது காதல் தோல்வி குறித்து மாணவி உண்மையை தெரிவித்துள்ளார். இதனை அவரின் முன்னாள் காதலர் மற்றும் அவரின் நண்பர்கள் கலாய்த்து இருக்கின்றனர். Online Order Scam: ஆன்லைனில் ஜாய்ஸ்டிக் ஆர்டர்போட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. டெலிவரி செய்யப்பட்ட பாம்பு.!
போக்ஸோவில் கைதான முன்னாள் காதலன்:
சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட விடீயோவின் கருத்துப்பதிவேட்டில் முன்னாள் காதலர் மற்றும் அவரின் நண்பர்கள் செய்த வேலையை தொடர்ந்து, பலரும் மாணவியை கலாய்த்து இருக்கின்றனர். இதனால் சில நாட்களாகவே மனமுடைந்து இருந்த மாணவி, கடந்த ஜூன் 10 அன்று தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். உயிருக்கு போராடிய நிலையில் பெண்ணை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் (Thiruvananthapuram Instagram Famous Girl Suicide) உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் 16 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பூஜபுரா காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தில் சிறுமியின் ஆண் நண்பரான பினோய் கைது செய்யப்பட்டார்.
(The above story first appeared on LatestLY on Jun 19, 2024 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

