Amazon Order Snake Delivery (Photo Credit: @VoiceUpMedia1 X)

ஜூன் 19, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அனேகல், சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் தான்வி. இவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளம் வாயிலாக எக்ஸ் பாஸ்ட் கண்ட்ரோலர் (Xbox Controller) ஆர்டர் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு டெலிவரி ஊழியர் ஆர்டர் செய்த பொருளை வழங்கி இருக்கிறார். ஆசையாக ஆர்டர் செய்த பொருளை வாங்கி பிரித்துப்பார்த்த தான்விக்கு, பேரதிர்ச்சியாக (Snake was Delivered) பார்சலில் இருந்து குட்டி பாம்பு ஒன்று எட்டிப்பார்த்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த அதிர்ச்சிதரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. BMW Car Ran Over and Killed: சாலையில் உறங்கிய பெயிண்டர் மீது கார் ஏறி பலியான விவகாரம்; ராஜ்யசபா எம்.பி மகள் கைது., உடனடி ஜாமின்.! 

அமேசான் தரப்பு விசாரணை:

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக அமேசான் (Amazon Order Snake Delivery) நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பாம்பு எப்படி பார்சலில் வைத்து அனுப்பப்பட்டது? என்ற சர்ச்சை கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. முன்னதாக அமேசான் உட்பட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பொருட்கள் ஆர்டர் செய்தால் விலைஉயர்ந்த பொருளுக்கு பதில் செங்கல் வைத்து அனுப்பிய சம்பவம் நடந்தது. தற்போது பாம்பு வைத்து அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அமேசான் போன்ற பிற ஆன்லைன் ஷாப்பிங் மீதான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.