Raveena Tandon Attacked: விபத்தை ஏற்படுத்திய நடிகையின் கார்; ரவுண்டு கட்டி வெளுத்த மக்கள்.. கதறிய நடிகை.!

நடிகை ரவீனா, அவரின் கார் ஓட்டுநர் செயலால் ஆத்திரமடைந்த மக்கள், அவர்களை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த பரபரப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணியாக மதுபோதை அமைந்துள்ளது.

Raveena Tandon Attacked (Photo Credit: @FPJIndia X)

ஜூன் 02, மும்பை (Cinema News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பந்த்ரா பகுதியில் நேற்று மாலை பிரபல ஹிந்தி நடிகை ரவீனா டாண்டன் (Raveena Tandon), தனது காரில் பயணம் செய்தார். இவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரின் வாகனம் லேசான விபத்தில் சிக்கியது. இதனால் சாலையில் சென்ற 3 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து, உள்ளூர் மக்கள் அங்கு கூடிய நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மற்றும் நடிகை முதலில் மக்களை அவதூதாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களை சிறைபிடித்தனர். ஒருசிலர் ஆவேகத்தில் தாக்கவும் முயற்சித்தனர். 2024 ICC T20 Men's T20 World Cup Google Doodle: ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024: டூடுல் வெளியிட்டு அசத்திய கூகுள் நிறுவனம்.! 

மதுபோதை நடிகையை சர்ச்சையில் சிக்க வைத்தது: விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் முதலில் வாய்சாவுடலாக பேசியதை தொடர்ந்து, அங்கு பரபரப்பு சூழல் உண்டானது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் நடிகையை மீட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். நடிகை மற்றும் அவரது கார் ஓட்டுனரின் செயலால் காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். தாமதமாக சூழ்நிலையை உணர்ந்த நடிகை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தும் பலனில்லை. பந்த்ரா பகுதியை சேர்ந்த முகமது என்பவரின் தாய், சகோதரி, மருமகள் ரிஸ்வி ஆகியோரின் மீது ரவீனாவின் கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. தற்போது வரை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement