ஜூன் 01, நியூயார்க் (Technology News): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (ICC Men's T20 World Cup 2024), ஜூன் மாதம் 01ம் தேதி முதல் தொடங்கி அமெரிக்காவில் விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது. டல்லஸில் உள்ள மைதானத்தில் கனடா - அமெரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் ஆட்டத்துடன் ஐசிசி டி20 தொடங்கியது.
கூகுள் டூடுல்: இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கொண்டாட்டத்தை வரவேற்கும் பொருட்டு, கூகுள் நிறுவனம் தனது டூடுளை வெளியிட்டு இருக்கிறது. அந்த டூடுளில் (Google Doodle) கிரிக்கெட் பேட்டுடன் நபர் விளையாடுவது போலவும், மற்றொருவர் பந்து வீசுவது போலவும் காட்சிதோற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Dinesh Karthik Retirement: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு; தினேஷ் கார்த்திக்கின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்.!
முதல் ஆட்டத்தின் விபரம்: இந்திய நேரப்படி அமெரிக்காவில் ஜூன் 02ம் தேதி மாலை 06:00 மணிஆய்வில் தொடங்கும் ஆட்டம் கொண்டாட்டத்துடன் முதல் போட்டியில் அடியெடுத்து வைக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவுக்குள் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.
Calling all cricket fans! Today's #GoogleDoodle celebrates the 2024 ICC Men's T20 Cricket World Cup. → https://t.co/wU1afeYk2M pic.twitter.com/KADifoVMpZ
— Google Doodles (@GoogleDoodles) June 1, 2024