Bigg Boss Contestant Raped: பெண் பிக் பாஸ் போட்டியாளரை பலாத்காரம் செய்த நண்பர்; காவல் நிலையத்தில் பரபரப்பு குற்றசாட்டு.!
தோழியுடன் நன்றாக பழகி அவரை பலாத்காரம் செய்த நண்பரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, பிக் பாஸ் பிரபலத்திற்கு நடந்தது அம்பலமாகியுள்ளது.
ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.
ஹிந்தி பிக் பாஸ் 11 போட்டியாளர்கள்: அந்த வகையில், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில், 11 வது சீசனில் போட்டியாளர்களாக ஷில்பா ஷிண்டே, அர்ஷி கான், ஹினா கான், பெனாஃப்ஷா சூனாவாலா, விகாஸ் குப்தா, ஹிட்டன் தேஜ்வானி, பிரியங்க் சர்மா, புனீஷ், ஆகாஷ் தத்லானி, லவ், பந்தகி கல்ரா, சப்னா சவுத்ரி, மெஹ்ஜாபி, ஷிவானி, துர்கா, ஜோதி குமாரி, ஜுபைர் கான், சப்யசாச்சி சத்பதி மற்றும் திஞ்செக் பூஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பெண் பரபரப்பு குற்றச்சாட்டு: இந்நிலையில், 11 வது சீசனில் மக்களிடம் அதிக கவனத்தைப் பெற்று, பின்நாட்களில் எந்தவிதமான வரவேற்பும் இல்லாமல் இருந்த மாடல் மற்றும் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை முன் வைத்திருக்கிறார். இந்த போட்டியாளர் சல்மான்கானுடன் அரட்டை அடிப்பது, போட்டியாளர்களுடன் சண்டை இடுவது என பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், அன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் நபராகவும் இருந்தார். UNESCO World Heritage Nomination: அப்படிப்போடு.. உலகளவில் அங்கீகாரம் பெறப்போகும் செஞ்சிக்கோட்டை; தமிழ்நாட்டுக்கே பெருமை..!

காவல் நிலையத்தில் புகார்: தற்போது அவர் தனது நண்பருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் தொடர்பான புகாரை அளித்துள்ளார். டெல்லியில் வசித்து வரும் அந்த பெண்மணி, அங்குள்ள தெற்கு டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், அதிகாரிகள் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அதிகாரிகள் விசாரணை: இது தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்ட பெண் பிக்பாஸ் போட்டியாளர், தனது நண்பர் தன்னை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் திரைத்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 31, 2024 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

