ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் வரலாறுகள் காகிதங்களுக்குள் அடங்காதவை. நமது மண்ணின் மைந்தர்களான வெவ்வேறு காலங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் வளர்ச்சிக்காக பாடுபட்டு இருக்கின்றனர். வீழ்ச்சிக்காக உடன்பட்டோரும் உண்டு எனினும், காலத்தின் ஓட்டம் அனைத்தையும் சரிசெய்தது. தற்போது, இந்தியா வல்லரசாகும் போராட்டத்தில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி, அதற்கான எதிர்கால திட்டமிடலுடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. நாடு என்னதான் வல்லரசை நோக்கி சென்றாலும், இந்திய மன்னர்களின் பாரம்பரிய நினைவு சின்னங்களும் அங்கீகரிக்கப்பட்டு, வரலாற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024 - 2025ம் ஆண்டுக்கான யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கும் பொருட்டு, மத்திய அரசு மராத்திய இராணுவ கட்டமைப்புகள் கொண்ட நிலப்பரப்புகள் உள்ள வரலாற்று இடங்களை அனுப்பி வைத்துள்ளது. Boy Ends Life After Upset Over His Haircut: ஸ்டைலாக முடி வெட்டிய சிறுவன்… தந்தை கண்டித்ததால் தற்கொலை..!
தேர்வு செய்யப்பட்ட கோட்டைகள்: அதன்படி, கடந்த 17ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரையில் உருவாக்கப்பட்ட மராத்திய இராணுவ நிலப்பரப்புகள், மராத்தியர்களால் அமைக்கப்பட்ட கோட்டை, இராணுவ கட்டமைப்புகள் ஆகியவற்றை பிரதிநித்துவப்படுத்தும் பொருட்டு, அதற்கேற்ப பிரத்தியேக பட்டியல் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட் கோட்டை, கந்தேரி கோட்டை, ராய்காட் கோட்டை, ராஜ்காட், பிரதாப்காட் கோட்டை, சுவர்ணதுர்க் கோட்டை, பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க் கோட்டை, மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை ஆகியவை வரலாறுகளின்படி மராட்டியர்கள் கைவசத்தில் முக்கிய கோட்டைகளாக இருந்துள்ளன. இவை அனைத்தும் யுனெஸ்கோ அங்கீகாரத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. Imran Khan Sentenced to Jail: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை; உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான் அரசியல்.!
மராட்டிய மண்ணில் உள்ள கோட்டை: மகாராஷ்டிராவில் 390க்கும் மேற்பட்ட கோட்டைகள் இருப்பினும், அவற்றில் 12 கோட்டைகள் மட்டுமே இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த எட்டு கோட்டைகள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை ஷிவ்னேரி கோட்டை, லோகாட், ராய்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜயதுர்க், சிந்துதுர்க் மற்றும் ஜிங்கி கோட்டை ஆகும். எஞ்சிய சல்ஹேர் கோட்டை, ராஜ்காட், கந்தேரி கோட்டை மற்றும் பிரதாப்கர் ஆகியவை மகாராஷ்டிரா அரசின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குநரகத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
செஞ்சிக்கோட்டை (Gingee Fort): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி நகரில் அமைந்துள்ள செஞ்சிக்கோட்டை, மராட்டிய மன்னர் சிவாஜியால் அசைக்க முடியாத கோட்டை என்ற பெயர் பெற்ற கோட்டை ஆகும். கி.பி 1190ல் அனந்த கோன் என்பவரால் கட்டப்பட்டதாக கூறப்படும் செஞ்சிக்கோட்டை, இயற்கையாக அமைந்த 3 மலைகளை இணைந்து, பிரம்மாண்ட மதில் சுவரால் பாதுகாக்கும் வகையில் கட்டப்பட்ட கோட்டை ஆகும். கோட்டையை சுற்றிலும் பாதுகாப்பு அரண்கள், கண்காணிப்பு கோபுரங்களும் உள்ளன. இன்றளவும் செஞ்சி - திருவண்ணாமலை, செஞ்சி - விழுப்புரம் பிரதான சாலைகளில் பயணிக்கும்போது, கோட்டையின் மதில் சுவரை காணும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த 1799ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக கோட்டை மதில் சுவர்கள் குறிப்பிட்ட அளவு பெயர்த்து எடுக்கப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டன. இவையே பின்னாளில் பிரதான வழித்தடமாக மாறிப்போனது. Susan Polgar Speaks Out: செஸ் விளையாட்டின் போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார்கள்... செஸ் வீராங்கனை சுசன் போல்காரின் பாப்பரப்பு குற்றச்சாட்டு..!
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் செஞ்சிக்கோட்டை: இந்திய நிலப்பரப்பு பல மன்னர்களின் ஆட்சியை கண்டதைப்போல, தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டை சோழர்களால் முதலில் சிறிய கோட்டையாக ஏற்படுத்தப்பட்டு, அடுத்தடுத்த படையெடுப்புக்கு முன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, செஞ்சி நாயக்கர்கள், சுல்தான்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரின் நிர்வாகத்தை சந்தித்த கோட்டை ஆகும். இங்கு வாழும் மக்களில், பீரங்கி மேடு பகுதியை சேர்ந்தவர்கள் இன்றளவும் போர்த்தெய்வமாக கருதப்படும் கொற்றவை (காளி) வழிபாடை ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடி வருகின்றனர். ராஜாகோட்டை, ராணிக்கோட்டை, சந்திரகிரிக்கோட்டை என 3 கோட்டைகள் குறிப்பிட்ட தொலைவில் அமைந்து, அப்பகுதி மக்களையும் அன்றைய அன்றைய நாட்களில் அரணாக காத்துள்ளது. தற்போது இக்கோட்டை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
யுனெஸ்கோ அங்கீகாரம் முக்கியம் - காரணம் என்ன? மத்திய அரசால் யுனெஸ்கோ கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள செஞ்சிக்கோட்டை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளை சேர்ந்த வரலாறு ஆர்வமிக்க சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும். பொதுவாக வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இடங்களையே முதலில் கவனிப்பார்கள். அந்த வகையில் செஞ்சிக்கோட்டையும் இனி கவனிக்கப்படும். எதிர்பாராத சூழலில் நாடுகளுக்கிடையே போர்கள் உண்டாயினும், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இடங்களில் தாக்குதல் நடத்தப்படாது. நினைவிடங்களை பாதுகாக்க யுனெஸ்கோவின் சார்பில் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும். இது வெளிநாட்டவர் நமது வரலாறு மற்றும் பாரம்பரியங்களை அறிந்துகொள்ள கூடுதல் வாய்ப்பாகவும் இருக்கும். செஞ்சி நகரின் சுற்றுலா வருவாய் மட்டுமல்லாது, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்படும் இடங்களின் சுற்றுலா வருவாயும் அதிகரிக்கும். செஞ்சிக்கோட்டை அங்கீகரிக்கப்பட்டால் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்றாகவும் செஞ்சிக்கோட்டை கூடுதல் எழில் பெரும்.
வரலாற்று தகவல், புகைப்படங்கள் நன்றி: தேவகுமார் முருகன், செஞ்சி பசங்க குழு.