Actress Rubina Dilak Advice: "உடலே கோவில், அதை பேணி காப்பாற்றுங்கள்" - பிரபல தொலைக்காட்சி நடிகை ரசிகர்களுக்கு வேற லெவல் அட்வைஸ்.!
உலகில் நாம் பல விதமான இயற்கை படைப்பு அம்சங்களை கண்டு கவியந்தாலும், நமது உடல் விடைபுரியாத மர்மம் இருக்கிறது. அதனை பேணிப்பாதுகாப்பது நமது கடமை ஆகும்.
ஜனவரி 08, மும்பை (Cinema News): ஜீ தமிழ் ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோட்டி பாஹு என்ற தொடரின் வாயிலாக, சின்னத்திரையில் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான நடிகை ரூபினா திலக் (Rubina Dilak). இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவர் பல தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார். 2014ம் ஆண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தேவன் கி தேவ்.. மகாதேவ் தொடர் பலத்த வரவேற்பை பெற்று தந்தது. அதனைத்தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஹிந்தி பிக் பாஸ் 14வது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை, அதன் வெற்றியாளராகவும் மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்டார்.
சின்னத்திரையில் முன்னணி நடிகை ரூபினா: தொலைக்காட்சி தொடர்களில் அடுத்தடுத்து நடித்து வந்த ரூபினா, ஆர்த் (Ardh) என்ற படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு நடிகரான அபினவ் சுக்லாவை திருமணம் செய்த நடிகை, கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தம்பதிகளுக்கு நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகளும் பிறந்தது. நடிகை ரூபினா எப்போதும் உடற்பயிற்சி செய்து உடலை திடமாக வைத்துக்கொள்ளும் எண்ணம் கொண்டவர். அதனை உறுதி செய்யும்பொருட்டு, கர்ப்பமாக இருக்கும்போதும் அதனை மேற்கொண்டார். தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள நடிகை, தான் கர்ப்பமாக இருந்த நவம்பர் 27ம் தேதி எடுத்துக்கொண்ட போட்டோ மற்றும் ஜனவரி 8ம் தேதி எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். Global Investors Meet: அடிதூள்... தமிழ்நாட்டில் ரூ.42,768 கோடி முதலீடு செய்யும் அதானி: 10,300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு..!

உடலே கோவில், அதனை பாதுகாக்க நடிகை அறிவுரை: அதாவது தான் கர்ப்பமாக இருந்த சமயத்தில் எடுப்பதை புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நமது உடல்தான் கோவில், அதுவே நம்மை பூமியில் வாழும் இறுதி நாள் வரை சுமந்து செல்கிறது. அதனால் அதற்கு தலைவணங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். பிரசவத்திற்கு பின்னர் 10வது நாளில் நடிகை யோகாவை தொடங்கிய நிலையில், 15வது நாளில் நீச்சல் பயிற்சிக்கும் சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து, 33வது நாளில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற மீண்டும் உடற்பயிற்சியை நடிகை ரூபினா தில மேற்கொண்டு வருகிறார்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jan 08, 2024 07:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

