டிசம்பர் 08, சென்னை (Chennai): தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக, கடந்த இரண்டு நாட்களில் ரூ.6.6 இலட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 26 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 14 இலட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பில் பலன் பெறுவார்கள். இன்றைய நாளின் முடிவில் தொழில் முதலீடு தொகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.42 ஆயிரம் கோடி முதலீடு: இந்நிலையில், தமிழ்நாட்டில் அதானி குழுமம் (Adani Groups) ரூ.42,768 கோடி முதலீடு செய்யவுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிமெண்ட் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், எரிவாயு விநியோகம் மற்றும் உற்பத்தி என பல துறைகளில் செய்யும் முதலீடுகள் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் 10,300 பேருக்கு அதானி குழுமம் நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது. Ease My Trip Rejects Maldives Tour Booking: அப்படிப்போடு.. மாலத்தீவு போக முன்பதிவு ரத்து.. "தேசம் தான் முதலில்., அப்புறம் தொழில்": நெகிழ்ச்சி செயல்.!
அதானியின் அதிரடி அறிவிப்பு: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் நேரடியாக கலந்துகொண்ட அதானி துறைமுகம் மற்றும் செஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி, தனது குழுமத்தின் ரூ.42,768 கோடி முதலீடு விபரத்தை உறுதி செய்தார். அதன்படி, அதானி குழுமம் செய்யும் முதலீடுகள் மற்றும் அதன் விபரங்கள் பின்வருமாறு.
10,300 பேருக்கு வேலைவாப்பு: அதானி பசுமை ஆற்றல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவு சார்பில் ரூ.24,500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதன் வாயிலாக 4 ஆயிரம் பேருக்கு அதானியின் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அம்புஜா சிமெண்ட்ஸ் பிரிவு சார்பில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யப்பட்டு, 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அதானி கனெக்ஸ் (AdaniConneX) தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ரூ.13,200 கோடி முதலீடு செய்யப்பட்டு, ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எரிவாயு மற்றும் சிஎன்ஜி பிரிவில் ரூ.1,568 கோடி முதலீடு செய்யப்பட்டு, 300 பேருக்கு அதானி நிறுவனத்தின் சார்பில் வேலை வழங்கப்படும்.