Jawan Prevue: ஷாருக்கானின் அதிரடி ஆக்சனில் தெறிக்கும் திரை; அட்லீயின் ஜவான் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு.! லிங்க் உள்ளே..!
Jawan Trailer (Photo Credit: YouTube)

ஜூலை 10, சென்னை (Cinema News): அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். இந்த திரைப்படத்தை ரெட் சில்லஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. அனிரூத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் கேட்டு ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே ட்விட்டரில் ரசிகர்கள் படக்குழுவிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், படத்தின் 2 நிமிட முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. Annamalai on CM MK Stalin: செந்தில் பாலாஜி புத்தரா?.. ஆளுநரை வில்லனாக சித்தரிப்பது ஏன்?; முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்.!

Jawan Trailer Visuals (Photo Credit: YouTube)

"நான் வில்லனாக வந்து நின்றால், என் முன்பு வந்து என்ன ஹீரோவும் நிற்க முடியாது ராஜா" என்ற அட்டகாசமான வசனத்துடன் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. படம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.