ஜூலை 10, கோயம்புத்தூர் (TN Politics): இங்கிலாந்து நாட்டில் உயர்படிப்புக்கு சென்ற இந்திய மாணவர் ஜீவானந்த் மரணம் அடைந்தார். அவரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை (Annamalai) இன்று கோவைக்கு சென்றுள்ளார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் வைத்து பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் விமான நிலையத்தில் (Coimbatore Airport) வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) ஜனாதிபதிக்கு ஆளுநர் குறித்து கடிதம் எழுதியுள்ளார். என்னை பொறுத்தமட்டில் அவர் தன்னை கண்ணாடி முன் நின்று சுயபரிசோதனை செய்ய வேண்டும். இல்லாத பிரச்சனைக்கு ஆளுநர் (TN Governor) காரணம் ஏன் கடிதம் எழுதியுள்ளனர். நானும் அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தேன்.
தமிழ்நாட்டில் திமுக அரசின் மீது அதிருப்தி இருக்கிறது. மக்களுக்கு தேவையான விஷயங்கள் செய்யப்படாமல் இருக்கின்றன. பல பிரச்சனைகள் இருக்கும் இப்படியான தருணத்தில் ஆளுநர் மீது பழி சுமத்துவது ஏன்?. ஆளுநரை சீண்டிப்பார்ப்பது ஏன்?. ஆளுநர் அமைச்சரை நீக்கியது தவறு என்று மு.க ஸ்டாலின் கூறுகிறார். இதே முதல்வர் கடந்த காலத்தில், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அதிமுக அமைச்சரை நீக்க வேண்டும் என்று கூறினார்?.
செந்தில் பாலாஜியை (Senthil Balaji) உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்கிறார்கள். செந்தில் பாலாஜியை புத்தர் போல உவமைப்படுத்தி எழுதியுள்ளார்கள். எதற்காக இவ்வுளவு பொய்கள்?. தன்னை நிலைநிறுத்தி கொள்ள தனது கட்சியின் தவறை மறைக்க ஆளுநரை வில்லனாக காண்பிப்பது ஏன்?. கள்ளச்சாராயம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாதது என திமுக மீது பல குற்றசாட்டுகள் இருக்கின்றன. Uttar Pradesh Shocker: கணவன் கண்முன் இளம் மனைவி பலாத்காரம்; துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளிகளை கைது செய்த அதிகாரிகள்.!
ஆளுநரை தரக்குறைவாக பேசுகிறார்கள் என்றால், தமிழத்தில் திமுக-வின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மட்டுமே பேசுகிறார்கள். ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கவில்லை. அவர்களின் கடிதப்படி ஆளுநர் சட்டப்பேரவையில் வழங்கிய கோப்பை படிக்கவில்லை என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு நம்பர் 1 ஆக இருப்பதாக கூறுகிறார்கள். அவை அப்பட்டமான பொய். அதனை எப்படி ஆளுநர் படிப்பார். இவர்கள் கொடுப்பதை படித்தால் திமுகவின் கிளிப்பிள்ளையா ஆளுநர்?.
திமுகவின் கடிதத்தை யாரும் பெரிதாக எடுக்கப்போவதில்லை. திமுகவின் 2026 தோல்வி பயமே கடிதத்தை வெளிப்படுத்துகிறது. முதல்வரிடம் 2024 பாராளுமன்ற தேர்தலின் தோல்வி பயம் தெரிகிறது. அந்த பயத்தின் வெளிப்பாடாக கடிதம் இருக்கிறது. 400 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் அமையும்" என பேசினார்.