Kannada Actor Arrested: கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி உட்பட 10 பேர் கைது..!
கர்நாடகாவில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி ஆகியோர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 11, பெங்களூரு (Karnataka News): கன்னட சினிமாவில் ‘அனதரு’, ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா' திரைப்படம் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை (Murder Case In Bengaluru) செய்த வழக்கில் மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Wife Caught Husband: ஓட்டலில் சாப்பிட்ட கணவன், காதலியை சாலையில் புரட்டி எடுத்த மனைவி..! வீடியோ வைரல்..!
கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகா சுவாமி என்பவர் தனியார் மருந்தகத்தில் (Medical Shop) வேலை பார்த்து வந்தார். இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக கொல்லபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பதாகவும், மேலும், அவருடன் சேர்த்து பவித்ரா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெங்களூருவின் காமல்ஷில்பாயாவில் உள்ள வாய்க்காலில் கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் கடந்த ஜூன் 9-ம் தேதி கண்டறியப்பட்டது. அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக, ரேணுகா சுவாமியின் தந்தை கூறுகையில், 'என்னுடைய ஒரே மகன். அவனுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. எனக்கு நீதி வேண்டும்' என கூறினார். இந்த கொலை வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா, மேலும் இதில் சம்மந்தப்பட்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

