Kannada YouTuber: ஆபாச படத்துல நடிப்பீங்களா?.. கேள்வி கேட்ட யூடியூபர் மீது புகார் கொடுத்த நடிகை.!
யூடியூப் சேனல் வைத்துள்ள பலரும், அதில் பணியாற்றும் நெறியாளர்களும் ஒரு சில நேரங்களில் ஆக்கப்பூர்வ கேள்விகளை விருந்தினரிடம் எழுப்புவதாக சிக்கலில் மாட்டிக்கொள்வது நடக்கும். அப்படியொரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது.
ஏப்ரல் 04, மல்லேஸ்வரம் (Cinema News): கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கன்னட நடிகை (Kannada Actress) ஒருவரிடம், யூடியூபர் சுஷான் (YouTuber Sushaan) என்பவர் நேர்காணல் எடுத்தார். அப்போது, நடிகையை நோக்கி "நீங்கள் ஆபாச படங்களில் நடிப்பீர்களா?" என நெறியாளராக அவர் கேள்விகளை முன்வைத்தார்.
இந்த கேள்விகளால் மனமுடைந்துபோன நடிகை தவிக்க, இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. இதனால் நடிகை மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் யூடியூபருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். Brahmastra Part 2 & 3: பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. மனம்திறந்த இயக்குனர்..!
இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல் துறையினர் யூடியூபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நடிகை பேசுகையில், "கன்னட சினிமாவில் யார் ஆபாச படம் எடுக்கிறார்கள்?. நான் ஆபாச படத்தில் நடித்திருக்கிறேனா?.
நான் ஆபாச படங்களில் நடிக்க விருப்பம் என கூறினேனா?. நான் ஆபாச பட நடிகையா?. என்னிடம் எதற்காக அவர் இவ்வாறான கேள்விகளை முன்வைக்க வேண்டும்?. யூடியூபில் நெறியாளர் என்றால் இவ்வாறான கேள்விகளை முன்வைக்கலாமா?" என கண்டனம் தெரிவித்தார்.
बेंगलुरू (#Bangalore) में कन्नड़ एक्ट्रेस ने एक यूट्यूबर के खिलाफ पुलिस में शिकायत दर्ज कराई है। साथ ही उसके खिलाफ कानूनी कार्रवाई की मांग की है। पुलिस ने मंगलवार को यह जानकारी दी। pic.twitter.com/Mq9TfMbvgr
— IANS Hindi (@IANSKhabar) April 4, 2023
(The above story first appeared on LatestLY on Apr 04, 2023 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

