Santhanam Vadakkupatti Ramasamy: 63 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த சந்தானத்தின் வடக்குப்பட்டி இராமசாமி படக்குழு.. இயக்குனர் அறிவிப்பு.!
காமெடியில் இன்று வரை நாயகனாக ஜொலித்து வரும் சந்தானம், அடுத்தடுத்த பல படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார்.
ஏப்ரல் 03, (Cinema News): கடந்த 2021ம் ஆண்டு கார்த்திக் யோகி (Karthick Yogi) இயக்கத்தில், காமெடி சூப்பர்ஸ்டார் நடிகர் சந்தானத்தின் (Actor Santhanam) நடிப்பில் வெளியான திரைப்படம் டிக்கிலோனா (Dikkiloona). இது ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியான நிலையில், படம் நல்ல வரவேற்பை பெற்றன.
இதே கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகி வரும் திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி (Vadakkupatti Ramasamy). இந்த படத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ் பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்டை இராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஜாக்குலின் உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர். RPF SI Sexual Assault: இளம்பெண்ணை பின்தொடர்ந்து சில்மிஷம் செய்த இரயில்வே எஸ்.ஐ.. பணியிடைநீக்கம் செய்த உதவி ஆணையர்; விசாரணையில் அதிர்ச்சி..!
இந்த படத்தை பீப்புள் மீடியா பேக்டரி தயாரித்து வழங்குகிறது. ஷான் ரோல்டன் இசையமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இயக்குனர் படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டு 63 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு இருந்தார். அதன்படி படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதுகுறித்த தகவலை இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Thanks almighty and everyone who worked hard for making this possible..
And that's a wrap!
After 63 days of tireless work, we've completed the shoot of #VadakkupattiRamasamy
Post-production in progress. Next updates coming soon!
Starring @iamsanthanam @akash_megha
— Karthik Yogi (@karthikyogitw) April 3, 2023
(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 09:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

